உக்ரேனிய பெண் பிரபலத்தின் மதிகெட்ட செயல்... குறிபார்த்து குண்டு மழை பொழிந்த ரஷ்யா
உக்ரேனிய சமூக ஊடக பிரபலம் ஒருவர், முக்கியமான ராணுவ மருத்துவமனை ஒன்றின் இட அமைவை வெளியிட்ட சில மணி நேரத்தில் ரஷ்யா குண்டு மழை பொழிந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 600,000 பின் தொடர்பாளர்களை கொண்டிருப்பவர் Anna Alkhim. இந்த நிலையில் மே 25 அன்று தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு தமது பின் தொடர்பாளர்களிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
Credit: Indtagram
அதாவது Dnipro பகுதியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையை குறிப்பிட்டு, உடனடி உதவி தேவைப்படுகிறது, உதவுங்கள் என கோரியுள்ளார். குறித்த மருத்துவமனையானது தற்போது போரினால் காயம்பட்ட உக்ரேனிய வீரர்களால் நிரம்பியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Anna Alkhim நேரலை செய்த அடுத்த சில மணி நேரத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 30 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மட்டுமின்றி, அந்த மருத்துவமனை வளாகமே சின்னாபின்னமாகியுள்ளது.
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலாவாரியாக குறிப்பிட்ட Anna Alkhim, உக்ரேனிய ராணுவ வீரர்கள் திரளானோர் உங்கள் ஆதரவுக்காக காத்திருக்கின்றனர், உணவுக்கும் உடைகளுக்கும் உதவ முன்வாருங்கள் என கோரியிருந்தார்.
@getty
தற்போது குற்றவாளி போல்
ரஷ்யா ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்த நிலையிலேயே Anna Alkhim தாம் செய்த மதிகெட்ட செயலை உணர்ந்துள்ளார். உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கியிருந்தாலும், உள்ளூர் ஊடகங்களால் தற்போது குற்றவாளி போல் பார்க்கப்படுகிறார்.
ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு முதன்மை காரணம் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு தான் என்பதையும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும், தமது செயலை அவர் ஆதரித்து பேசியுள்ளார்.
தாம் இதுவரை ராணுவத்திற்கு உதவும் பொருட்டு போரின் முதல் நாளில் இருந்தே பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செய்து வருபவர் எனவும், அதையும் கருத்தில் கொண்டு விமர்சியுங்கள் என Anna Alkhim குறிப்பிட்டுள்ளார்.
@getty
போர் தொடங்கிய நாளில் இருந்தே, சமூக ஊடக பிரபலங்களுக்கு உக்ரேனிய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ரகசியம் பாதுகாக்கப்படவேண்டிய தரவுகளை எந்த காரணம் கொண்டும் சமூக ஊடக பக்கத்தில் பகிர வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தனர்.
மட்டுமின்றி, உக்ரைன் தற்போது இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தரவுகளை பகிரும்போது அவதானம் தேவை எனவும் எச்சரித்திருந்தனர்.
மருத்துவமனை மீதான தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் கடுமையாக விமர்சித்திருந்தார்.