இரண்டாம் உலக போருக்கு பின்னர் உக்ரைனில் மரண அடி வாங்கும் ரஷ்யா: முரட்டு பிடிவாதத்தில் புடின்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய பின்னர், இதுவரை ரஷ்யா தங்களின் 15 தளபதிகளை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகரை இரண்டே நாட்களில் கைப்பற்றிவிடுவதாக கூறி பிப்ரவரி 24ம் திகதி களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வந்தாலும், இதுவரை தலைநகர் கீவ்வை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
ஆனால் ரஷ்ய துருப்புகள் இதுவரை தங்களின் சிறந்த 15 தளபதிகளை உக்ரைனில் பலிகொடுத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் மரண அடி வாங்குவதாக தகவல் வெளியான நிலையில், தளபதி Alexei Sharov கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய துருப்புகள் உறுதி செய்துள்ளன.
ரஷ்யாவின் 810வது படைப்பிரிவுக்கு தளபதியாக செயல்பட்டு வந்த Alexei Sharov உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரில் உக்ரைன் துருப்புகளால் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் தற்போதும் 200,000 குடிமக்கள் சிக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது. ரஷ்ய தளபதி Alexei Sharov பலியான தகவல் உக்ரைன் அதிகாரிகளால் சமூக ஊடகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மரியுபோல் நகரை ரஷ்ய துருப்புகள் மூன்று பக்கங்களில் இருந்தும் கண்மூடித்தனமாக தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மரியுபோல் நகரில் உணவு மற்றும் தண்ணீர் ஏதுமின்றை தத்தளிக்கும் உக்ரைன் மக்கள் கதிர்வீச்சுக்கு இலக்கான குடிநீர் மற்றும் தெருநாய்க்களை சமைத்து உணவாகக் கொள்வதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தளபதி Alexei Sharov மற்றும் அவரது 18 சக அதிகாரிகளும் உக்ரைன் துருப்பின் எதிர்வினைக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தரப்பில் 15வது தளபதி கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 10,000 வீரர்களையும் இழந்துள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, 15,000 ரஷ்ய வீரர்கள் இறந்திருக்கலாம் என உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய தளபதிகளை வரிசையாக இழப்பதால் ரஷ்யா தரப்பு கடும் நெருக்கடியை எதிகொண்டு வருவதாகவே கூறுகின்றனர்.
இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முரட்டு பிடிவாதம் காரணமாகவே உக்ரைன் மீதான போர் நீடிப்பதாக தெரிவிக்கின்றனர்.