ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியனான உக்ரேனிய பெண்! கைகுலுக்க மறுப்பு..கண்ணீர் சிந்திய வீடியோ
டெக்சாஸில் நடந்த WTA டென்னிஸ் இறுதிப் போட்டியில், உக்ரேனிய வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் ரஷ்யா வீராங்கனையை வீழ்த்தினார்.
உக்ரேனிய வீராங்கனை வெற்றி
ATX ஓபனின் இறுதிப் போட்டி டெக்சாஸின் ஆஸ்டினில் நடந்தது. இதில் உக்ரேனிய வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக், ரஷ்யாவின் வர்வாரா கிரச்சேவாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
கீவ்வில் பிறந்த மார்டா கோஸ்ட்யுக் வெற்றிக்கு பின்னர் ரஷ்ய வீராங்கனைக்கு கைகொடுக்க மறுத்து நடுவரிடம் மட்டும் கைகுலுக்கினார்.
"I want to dedicate this title to Ukraine. It's a very special moment ??"@marta_kostyuk | #ATXOpen pic.twitter.com/RKtWoGPKdP
— wta (@WTA) March 5, 2023
கண்ணீர் சிந்திய தருணம்
அதன் பின்னர் கண்ணீர் மல்க பேசிய அவர், 'நான் இப்போது இருக்கும் நிலையில் இந்த பட்டத்தை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பட்டத்தை உக்ரைனுக்கும், தற்போது போராடி இறக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனில், ஜோகோவிச்சின் தந்தை ரஷ்யக் கொடியுடன் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முகத்துடன் போஸ் கொடுத்ததைப் பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் கூறினார்.