போரை முடித்துக்கொள்ளும் கட்டத்தை துவக்கவிருக்கும் உக்ரைன்: புத்தாண்டில் புதிய திட்டம்
ரஷ்யா தொடுத்திருக்கும் போரினை முடித்துக்கொள்ளும் முக்கியமான கட்டத்தை பிறக்கவிருக்கும் புத்தாண்டில் உக்ரைன் துவங்க இருப்பதாக அமெரிக்க முன்னாள் முக்கிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீட்கும்
ரஷ்யா வசமிருக்கும் பகுதிகளை மட்டுமின்றி, முன்னர் இழந்த கிரிமியாவையும் உக்ரைன் மீட்கும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட 11 மாதங்களாக ரஷ்ய ஊடுருவலை துணிவுடன் எதிர்கொண்டுவரும் உக்ரைன், கிரிமியா பகுதியையும் கைப்பற்றும் முனைப்பில் திட்டம் தீட்டி வருகிறது.
@getty
இதில், ரஷ்ய தரப்பில் 100,000 வீரர்கள் பலியானதுடன், தற்போது பேச்சுவார்த்தைக்கும் தயார் என விளாடிமிர் புடின் அறிவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது வெற்றியின் விளிம்பில் உக்ரைன் இருப்பதையே காட்டுகிறது என்கிறார் முன்னாள் அமெரிக்க ராணுவ தளபதியான Ben Hodges.
பிறக்கும் புத்தாண்டில் உக்ரைனின் கை ஓங்கும் எனவும், தற்போது குளிர்காலம் என்பதால், போர் மெதுவாக நகர்வதாகும், ஆனால் ஜனவரி முதல் உக்ரைன் போர் அடுத்த கட்டத்திற்கு நகரும் எனவும், கிரிமியாவையும் உக்ரைன் மீட்டெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
@AP