ரஷ்யா கைப்பற்றிய 600 சதுர கிமீ நிலப்பரப்பை மீட்ட உக்ரைன்
2026-ல் ரஷ்யாவிடமிருந்து இதுவரை 600 சதுர கிலோமீற்றருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை மீட்டுள்ளதாக, உக்ரைன் இராணுவத் தலைவர் ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா தொடந்து முன்னேற்றம் கண்ட நிலையில், இந்த மீட்பு உக்ரைன் மீண்டும் முன்னிலை பெறாத தொடங்கியுள்ளதற்கான முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.
மே மாதத்தில் மட்டும், உக்ரைன் இழந்த நிலப்பரப்பை விட 100 சதுர கி.மீ. அதிகமாக மீட்டுள்ளது.
மேலும், 1,200 கி.மீ. நீளமான முன்னணி எல்லையின் சில பகுதிகளில் உக்ரைன் படைகள் முன்னிலை வகிப்பதாக சிர்ஸ்கி டெலெக்ராமில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரஷ்யா கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்து வருவதாகவும், தினசரி மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, 2024 முதல் ரஷ்யா கைப்பற்ற முயற்சி செய்துவரும் கிழக்கு நகரமான Pokrovsk பகுதியில் காஃனும்னியான போர் நிலவுகிறது.
DeepState எனும் சுயாதீன போர்க்கள வரைபடங்கள், ரஷ்யாவின் முன்னேற்றம் சமீபத்திய மாதங்களில் மந்தமாகியிருப்பதை காட்டுகின்றன.
2023-ல் உக்ரைன் நடத்திய பெரிய எதிர் தாக்குதல் தோல்வியடைந்த பின்னர், ரஷ்யா மெதுவாக முன்னேற்றம் கண்டிருந்தது.
ஆனால், 2026 தொடக்கத்தில் உக்ரைன் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நடத்திய தாக்குதல்கள், ரஷ்யாவின் வசந்தகால தாக்குதலை தடுக்க உதவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடினமான மற்றும் மாற்றம் நிறைந்த சூழலில் நிலப்பரப்பை மீட்கும் முயற்சிகள் நடைபெருவதாக சிர்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த முன்னேற்றமானது, உக்ரைன் தனது நிலப்பரப்பை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான உறுதியான முயற்சியை வெளிப்படுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |