உக்ரைனில் இருந்து ரஷ்யா திருடிச் செல்லும் மிக முக்கிய பொருள்: அதிர்ச்சி காணொளி!
உக்ரைனில் உள்ள வணிகத் துறைமுகமான மரியுபோலில் இருந்து இரும்பு எஃகு உருளைகளை சரக்கு கப்பலகளில் ரஷ்யா திருடிச் செல்வது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
உக்ரைனில் 95வது நாளாக போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தனது பலவார முற்றுகைக்கு பிறகு உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய படையினர் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.
In #Mariupol commercial port, #Ukrainian rolled steel is loaded onto the #Russian cargo ship Slavutich. This was reported by the adviser to the head of the city Petr Andryushchenko.
— NEXTA (@nexta_tv) May 29, 2022
He states that according to preliminary information they plan to take the steel to Rostov-on-Don. pic.twitter.com/HFlibEjvLX
ரஷ்ய படையினரின் இந்த துறைமுக முற்றுகையால் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய டன் கணக்கான உணவு தானியங்கள் தேங்கி நிற்கும் நிலையில், மரியுபோலின் துறைமுகத்தில் இருந்து இரும்பு எஃகு உருளைகளை ஸ்லாவ்டிச் என்று அழைக்கப்படும் ரஷ்ய சரக்கு கப்பல்களில் ரஷ்ய அதிகாரிகள் திருடிச் செல்வது அம்பலமாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த திருட்டு சம்பவத்தை மரியுபோல் நகரின் தலைவரின் ஆலோசகர் பீட்டர் ஆண்ட்ரியுஷ்செங்கோ வெளிப்படுத்தியுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாலஸ்தீன இஸ்லாமிய பகுதிகளுக்குள் புகுந்த இஸ்ரேலியர்கள்: கொடி அணிவகுப்பில் பதற்றம்!
மேலும் அவர் தெரிவித்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, உக்ரைனின் இரும்பு எஃகு உருளைகள் ரோஸ்டோவ்-ஆன்-டானுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.