உக்ரைனுக்குள் மீண்டும் முன்னேறும் ரஷ்யா: 5 நகரங்களை கைப்பற்றியதாக அறிவிப்பு
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்திற்கு உட்பட்ட 5 நகரங்களை சமீபத்திய நாட்களில் கைப்பற்றி இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட 5 நகரங்கள்
சமீபத்திய நாட்களில் ரஷ்ய படைகளை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து கார்கிவ் பிராந்தியத்தின் 5 நகரங்களை கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதனை கார்கிவ் இராணுவ நிர்வாகத்தின் மாஸ்கோ தலைமையான விட்டலி கஞ்சேவ் ரஷ்யாவின் TASS தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
Delil Souleiman/AFP via Getty Images
இது தொடர்பாக இன்று அவர் தெரிவித்த தகவலில், ரஷ்ய படைகள் கார்கில் பிராந்தியத்தில் 29 குடியேற்றங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தெரிவித்தார், ஆனால் அவர் முதலில் குறிப்பிட்ட 5 நகரங்கள் இவற்றில் இருந்து கூடுதல் எண்ணிக்கையா என்பது தெளிவாக தெரியவில்லை.
மேலும் உக்ரைனிய படைகள் கிளஸ்டர் குண்டுகளை இப்பகுதியில் தாக்குதலுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
அத்துடன் இந்த தாக்குதலால் தங்களுடைய வீரர்களால் 17 குடியேற்றங்களில் இருந்து மட்டுமே செயல்பட முடிவதாகவும் தெரிவித்தார்.
Sky News
அங்கீகரிக்காத உக்ரைன்
இதற்கிடையில் உக்ரைன் ஆயுதப்படையின் தினசரி அறிவிப்பில், இன்று கார்கிவ்-வின் 10 நகரங்கள் கடுமையான ஏவுகணை அல்லது வான் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் ரஷ்யா அறிவித்துள்ள 5 நகரங்களின் கைப்பற்றல் குறித்து எத்தகைய அங்கீகாரமும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை.
மேற்கூறிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தங்கள் செய்தி நிறுவனத்தால் சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |