உக்ரைன் குடியிருப்புகள் அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு, ஜெலென்ஸ்கி கண்டனம்
உக்ரைனின் ஜாபோரிஜியா நகரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 530 நாட்களை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 41 நாடுகளின் உயர் அதிகாரிகள் உடன் இணைந்து உக்ரைனுக்கான போர் அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் விவாதித்து வருகிறது.
Another missile attack by russian terrorists on the civil infrastructure of Zaporizhzhia. A church, shops, and a high-rise apartment building were destroyed.
— Defense of Ukraine (@DefenceU) August 9, 2023
Once again, they deliberately hit a peaceful city without any military value, only to compensate for their own defeats. As… pic.twitter.com/kuh7Q4SEgW
ஆனால் இந்த நிலையிலும் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ தாக்குதல் முன்கள வரிசையில் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏவுகணை தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனின் ஜாபோரிஜியா நகரத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 3 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன், 7 பேர் படுகாயமடைந்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
Russian missile hits residential neighborhood in #Zaporizhzhia
— NEXTA (@nexta_tv) August 9, 2023
The attack on the city killed 3 people and 7 were injured, Ukrainian President Volodymyr Zelenskyy said.
The head of the Ukrainian President's Office, Andriy Yermak, said that preliminary data showed that the strike… pic.twitter.com/MjLYNCfVR4
இதற்கிடையில் முதல் தர தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் Iskander ஏவுகணை மூலம் நடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் ஆண்டரி யெர்மக் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |