ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உட்பட 7 பேர் கொலை
ஞாயிற்றுக்கிழமையான இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா
உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு ரஷ்யா கைப்பற்றி வைத்து இருந்த கெர்சன் போன்ற முக்கிய நான்கு மாகாணங்களை ரஷ்யாவின் ஒற்றை அங்கமாக ஜனாதிபதி புடின் அறிவித்தார்.
ஆனால் உக்ரைன் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு பிறகு கெர்சனின் மேற்கு பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் உக்ரைனிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இருப்பினும் டினிப்ரோ ஆற்றின் கரைக்கு அப்பால் இருந்து இப்பகுதிகளை ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
3 வாரங்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கெர்சனின் ஷிரோகா பால்கா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது என உள்துறை அமைச்சர் இகோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.
இதில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை மற்றும் அவரது 12 வயது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் என மொத்தம் 7 பேர் ரஷ்யாவின் இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
A 12-year-old boy, who came under fire from invaders in #Kherson region, died in hospital
— NEXTA (@nexta_tv) August 13, 2023
Earlier, from the shelling of the invaders in the village of Shirokaya Balka, the whole family of the boy died - his father, mother and sister, who was not even a month old. pic.twitter.com/YxlsBb335b
ஸ்டானிஸ்லாவ் அருகே உள்ள மற்றொரு கிராமத்திலும் ரஷ்யாவின் தாக்குதலால் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தீவிரவாதிகள் கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் படைகள் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிளிமென்கோ குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |