இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வெறியாட்டம்: ஏவுகணை தாக்குதலில் 3 உக்ரைனியர்கள் உயிரிழப்பு
வட மேற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் லிவிவ்(Lviv) மற்றும் லுட்ஸ்க்(Lutsk) பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்து இருப்பதுடன் நிறைய கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக அந்தந்த பகுதி நகர மேயர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வட மேற்கு உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவிய 28 ஏவுகணைகளில் 16 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனிய விமானப் படை தெரிவித்துள்ளது.
Reuters
இதற்கிடையில் லிவிவ்-வில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ரஷ்யாவின் இரவு நேர தாக்குதலில் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக அதன் மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார்.
3 பேர் உயிரிழப்பு
லுட்ஸ்க் மற்றும் வோலின் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஏவுகணை எச்சரிக்கை அபாய ஒலி தொடர்ந்து ஒலிக்கப்பட்டது.
STATE EMERGENCY SERVICE OF UKRAINE
ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் வோலின் பிராந்தியத்தின் தலைநகரான லுட்ஸ்க்-கில் அமைக்கப்பட்டு இருந்த ஸ்வீடன் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று சேதமடைந்துள்ளது.
இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலில், தங்களுடைய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்து இருப்பதை உறுதிப்படுத்துவதில் வருத்தமடைகிறோம் என குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |