வெளியேறிய ரஷ்ய படை: பாம்புத் தீவில் உக்ரைன் தேசிய கொடியை ஏற்றிய இராணுவ வீரர்கள்
கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில் அங்கு உக்ரைன் தேசிய கொடியை அந்த நாட்டு வீரர்கள் ஏற்றியுள்ளனர்.
ஏற்றப்பட்ட உக்ரைன் தேசிய கொடி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பிறகு கருங்கடலில் உள்ள பாம்பு தீவை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தனர். அத்துடன் பாம்பு தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த உக்ரைனிய வீரர்களை உடனடியாக சரணடையுமாறு ரேடியோ மூலம் கெடு கொடுத்து ரஷ்ய படையினர் உத்தரவிட்டனர்.
ஆனால் ரஷ்ய படையின் உத்தரவை மதிக்காத உக்ரைனிய வீரர்கள் அவர்களுக்கு எதிராக ரேடியோவில் திட்டித் தீர்த்தனர்.
Footage of the restoration of the border sign on #SnakeIsland. pic.twitter.com/4UNuHyKBHF
— NEXTA (@nexta_tv) August 13, 2023
இதனால் பாம்பு தீவில் இருந்த உக்ரைனிய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், ஆனால் ரஷ்ய வீரர்களை திட்டி ரேடியோவில் உக்ரைனிய வீரர்கள் பேசிய ஆடியோ உலக அளவில் மிகவும் வைரலானது.
பாம்பு தீவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்தாலும், அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற நோக்கில் உக்ரைன் தொடர் வான் தாக்குதலை நடத்தி வந்தது.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் பாம்பு தீவில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, ரஷ்ய வீரர்கள் பாம்பு தீவில் இருந்து வெளியேறினர்.
The #Ukrainian Border Service restored the border sign on the Snake Island in the western part of the Black Sea. In 2022, it was destroyed by the Russian invaders who briefly occupied the island. The Russians had to leave it on June 30, 2022 after a series of devastating… pic.twitter.com/P8UTMYf2If
— Viktor Kovalenko (@MrKovalenko) August 13, 2023
இதனை தொடர்ந்து தற்போது உக்ரைனிய வீரர்கள் பாம்பு தீவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உக்ரைன் நாட்டு தேசிய கொடியை அங்கு ஏற்றியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |