உக்ரைனுக்கு வந்த ஆப்பிரிக்க தலைவர்கள் பதறி ஓட்டம்: மரண பயத்தைக் காட்டிய ரஷ்யா
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரையும் எதிரியாக பார்க்கிறது ரஷ்யா. அதை வெளிப்படையாகவும் கூறிவிட்டது.
உக்ரைனுக்கு வந்த ஆப்பிரிக்க தலைவர்கள் பதறி ஓட்டம்
இந்நிலையில், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வந்த ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு மரண பயத்தைக் காட்டியது ரஷ்யா.
ஆம், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி Cyril Ramaphosa, செனகல் ஜனாதிபதி Macky Sall உட்பட பல தலைவர்கள் அமைதி முறைப் பயணமாக நேற்று கீவ்வுக்கு வந்திருந்தார்கள்.
அப்போது, திடீரென சைரன் ஒலி எழுப்பப்படவே, கீவ் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது குறித்து தெரிவித்த மேயர் Vitali Klitschko, மேலும் ஏவுகணைகள் வீசப்படலாம் என எச்சரித்ததைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கத் தலைவர்கள் குண்டு பாதிக்காத அறைகளை நோக்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.
அதாவது, கீவ்வுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வருகை புரிந்த நேரத்திலேயே ரஷ்யா கீவ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை
இந்த ஏவுகணைத் தாக்குதல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா கொடுக்கும் எச்சரிக்கை செய்தி என்று கூறியுள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba, ரஷ்யா மேலும் போரைத்தான் விரும்புகிறது, அமைதியை அல்ல என்று கூறியுள்ளார்.