உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் விடயம்: ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ள முக்கிய தகவல்
நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்காக ஆதரவு திரட்டிவருகிறார்.
செக் குடியரசுக்கு சென்றிருந்த ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் ஜனாதிபதியான Petr Pavel முன்னிலையில் ஊடகவியலாளர்களிடம் பேசினார். அப்போது, உக்ரைன் போர் குறித்தும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகள் குறித்தும் பேசினார் ஜெலன்ஸ்கி.
உக்ரைன் படைகள் நிச்சயமாக முன்னேறுகின்றன
உக்ரைன் ரஷ்யப் போரைப் பொருத்தவரை, உக்ரைனுடைய எதிர்த்தாக்குதல் வேகமானதாக இல்லை என்று கூறிய அவர், ஆனால், உக்ரைன் படைகள் நிச்சயமாக முன்னேறுகின்றன என்றார்.
CBC
நாங்கள் ரஷ்யர்களைப் போல பின்வாங்கவில்லை என்று கூறிய ஜெலன்ஸ்கி, நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்றார்.
நேட்டோ தயக்கம் காட்டுகிறதா?
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது குறித்து பேசிய ஜெலன்ஸ்கியின் வார்த்தைகள், உக்ரைனை இணைத்துக்கொள்ள நேட்டோ தயக்கம் காட்டுகிறதோ என எண்ணும் வகையில் அமைந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது.
CNN
கீவ், நேட்டோவுடனான பிணைப்பில் நேர்மையை எதிர்பார்க்கிறது என்று கூறிய அவர், நேட்டோவிடமிருந்து ஒரு தெளிவான சமிக்ஞையை உக்ரைன் எதிர்பார்க்கிறது, ஆனால், நேட்டோவுடன் இணைவதற்கான எந்த அழைப்பும் உக்ரைனுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றார்.
இந்நிலையில், நேட்டோ இராணுவக் கமிட்டியின் முன்னாள் தலைவராக இருந்தவரான Pavel, போர் முடிந்ததும், உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை துவக்கவேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |