ரஷ்யாவுடனான போரில் முதன்முறையாக நீர்மூழ்கிக் கப்பலை தாக்கிய உக்ரைன்
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை நீருக்கடியில் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
நீருக்கடியில் உள்ள ட்ரோன்கள்
ரஷ்யாவுடனான தனது போரில் முதன்முறையாக, நீருக்கடியில் உள்ள ட்ரோன்கள் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை வெற்றிகரமாகத் தாக்கியதாக உக்ரைன் கூறியுள்ளது. 
Novorossiysk கருங்கடல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை தாக்கியதை, "தனித்துவமான சிறப்பு நடவடிக்கையை" மேற்கொண்டதாக உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், "வரலாற்றில் முதல் முறையாக, Sub Sea Baby நீருக்கடியில் உள்ள ட்ரோன்கள் ரஷ்ய திட்டம் 636.3 Varshavyanka வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலை வெடிக்கச் செய்தன. இதன் விளைவாக நீர்மூழ்கிக் கப்பல் கடுமையான சேதத்தை சந்தித்தது" என்றும் கூறியது.
எந்த கப்பல்களும் சேதமடையவில்லை
இந்த தாக்குதல் நடந்ததை ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை ஒப்புக்கொண்டது. ஆனால், எந்த கப்பல்களும் சேதமடையவில்லை என்றும் மறுத்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |