ரஷ்யாவின் ஓயாத தாக்குதல்களை பாக்முட்டிலிருந்து தான் தடுக்க முடிகிறது: உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் பாக்முட்டில் தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடைபெறுவதாகவும், அதனை பாக்முட்டிலிருந்து தான் தடுக்க முடிகிறது என உக்ரேனிய துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போர்
ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு நடந்த மிகக் கொடூரமான போர்களில் ஒன்றாக, கிழக்கு பாக்முட் நகரில் ரஷ்யப் படைகளின் "ஓயாத" தாக்குதல்களை, உக்ரைன் ராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
@afp
உக்ரேனிய துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார்(hanna malyar) ”உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் கடுமையான சண்டை நடைபெறுவதாக கூறியுள்ளார், மேலும் உக்ரைன் படைகள் பெரும்பாலான பகுதிகளில் ரஷ்ய படைகளின் முன்னேற்றங்களைத் தடுத்து நிறுத்துகின்றன.” என கூறியுள்ளார்.
"எதிரிகளின் தாக்குதல் முயற்சிகளில் பெரும்பாலானவை பாக்முட் நகரில் நிகழ்கின்றன," என்கிறார். ரஷ்ய ராணுவ தலைமை அதிகாரிகள் மற்ற பகுதிகளிலிருந்து பாக்முட்டிற்கு ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளனர்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா கணிசமான அளவு பீரங்கி மற்றும் விமானத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும், வாக்னர் மற்றும் ரஷ்யப்படை பாக்முட்டில் 40 முதல் 50 புயல் நடவடிக்கைகள் மற்றும் 500 ஷெல் தாக்குதல்களை மேற்கொள்கிறது.
பாக்முட்டின் வெற்றியே முக்கியம்
ரஷ்யாவைப் பொறுத்தவரை, பாக்முட் இந்த நீண்ட போரில் வெற்றியைப் பெற தீவிரமாக முயற்சிப்பதால் அந்த நகரை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். பாக்முட்டைக் கைப்பற்றுவது டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இரண்டு பெரிய நகரங்களில் முன்னேறுவதற்கு ஒரு படியாக இருக்கும் என்று ரஷ்யா நம்புகிறது.
@reuters
போருக்கு முந்தைய மக்கள் தொகை 70,000 ஆக இருந்த இந்த நகரத்தை கைப்பற்ற ரஷ்ய வீரர்கள் கடந்த கோடையிலிருந்து போராடி வருகின்றனர். ரஷ்ய இராணுவத்தின் விமானப்படை "உக்ரேனிய இராணுவ ஆய்தங்களை நகரத்திற்கு மாற்றுவதையும், எதிரி பிரிவுகளுக்கு பின்வாங்குவதற்கான வாய்ப்பையும் தடுக்கிறது" என்று கூறியுள்ளது.
வாக்னர் கூலிப்படையினர் நகரத்தில் முன்னேறி வருவதாக தெரியவந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள நகரின் மத்திய பகுதிகளிலிருந்து எதிரிகளை வெளியேற்றுவதற்காக, வாக்னர் தாக்குதல் பிரிவுகள் அதிக தீவிரம் கொண்ட போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்தன என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
@reuters
இதற்கிடையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு பெரிய எதிர் தாக்குதலை நடத்துவதற்கு உதவுவதற்காக மேலும் ஆயுதங்ளை பெற நட்பு நாடுகளை நாடியுள்ளார்.
"நாங்கள் எங்கள் வீரர்களை தயார் செய்கிறோம். நட்பு நாடுகள் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயுதங்களை வழங்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். நாங்கள் வெற்றியை முடிந்தவரை நெருக்கமாக கொண்டு வருவோம்,” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.