ட்ரோன் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்
ரஷ்ய போர் கப்பலை உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கப்பலை தாக்கிய உக்ரைனிய ட்ரோன்
உக்ரைனின் பாதுகாப்பு சேவைகளால் பகிரப்பட்டுள்ள சமீபத்திய வீடியோவில், உக்ரைனிய கடல்வழி ட்ரோன்கள் கருங்கடல் வழியாக நகர்ந்து ரஷ்யாவின் நோவோரோசிஸ்க்(Novorossiysk) துறைமுகத்திற்கு அருகே நின்று கொண்டு இருந்த ரஷ்ய கப்பல் மீது மோதுவதை பார்க்க முடிகிறது.
இது தொடர்பாக உக்ரைனிய உளவுத் துறை ஆதாரங்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்த கருத்தில், ரஷ்யாவின் ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக்(Olenegorsky Gornyak) கப்பல் உக்ரைனின் கடல்வழி ட்ரோன்களால் தாக்கபட்டது.
Another video of ?? naval drone attacking a large russian warship in Novorossiysk. Moskva is waiting, comrades! #StandWithUkraine #RussiaIsLosing pic.twitter.com/h5JjbXiHQO
— olexander scherba?? (@olex_scherba) August 4, 2023
இவை உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை கடற்கரையில் தரையிறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலின் போது 450 கிலோ TNT-களை உக்ரைன் ட்ரோன்கள் சுமந்து இருந்தது என்றும், 100 ரஷ்ய பணியாளர் கப்பலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரஷ்ய கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் துறைமுக தகவல் அறிந்த ஆதாரம் வழங்கிய தகவலில், ரஷ்ய கடற்படை கப்பல் ஒன்று சேதமடைந்து கரைக்கு இழுத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Satellite images of the large Russian landing ship "Olenegorsky Gornyak", which was damaged today in the Black Sea. The ship is based in #Novorossiysk.
— NEXTA (@nexta_tv) August 4, 2023
In Novorossiysk, a ship brought in from the Northern Fleet, will most likely stay there until the end of the war. There are no… pic.twitter.com/T1mvMP9wQH
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தளத்திற்கு வெளியே நடத்தப்பட்ட 2 உக்ரைனிய ட்ரோன்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ட்ரோன்கள் முழுவதும் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |