நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ
நாட்டு நாட்டு பாடலுக்கு உக்ரேனிய ராணுவ வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
நாட்டு நாட்டு பாடல்
ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலின் ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படத்தின் இந்தப் பாடல் கேட்ட அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது. மொழி மட்டுமின்றி பல எல்லைகள் கடந்து இந்த பாடலுக்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த பாடலை வெளிநாட்டினர் உண்மையில் கொண்டாடியுள்ளனர். இன்னும் உலகின் பல பகுதிகளில் சில திரையரங்குகளில் இப்பாடல் திரையிடப்படுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நாட்டு நாட்டு பாடலுக்கு மக்கள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
போர்க்களமாக மாறியுள்ள உக்ரைனிலிருந்து
ஆனால் தற்போது வைரலான வீடியோ போர்க்களமாக மாறியுள்ள உக்ரைனில் இருந்து வந்துள்ளது. ஆம், உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடி கொண்டாடினர். அவர்களது நடன வீடியோ வைரலாகி வருகிறது.
ஜேன் ஃபெடோடோவா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 2 நிமிட வீடியோவில், மைக்கோலைவ் வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம்.
இப்பாடலில் எப்படி ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடனமாடினார்களோ, அதே போன்று இந்த பாடலில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் நடனமாடியுள்ளனர்.
Військові з Миколаєва зняли пародію на пісню #NaatuNaatu з ?? фільму "RRR", головний саундтрек якого виграв Оскар цього року.
— Jane_fedotova?? (@jane_fedotova) May 29, 2023
У оригінальній сцені гол.герої піснею виражають протест проти британського офіцера (колонізатора) за те, що він не пустив їх на зустріч. pic.twitter.com/bVbfwdjfj1
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
உண்மையான காட்சிகள்
இந்த பாடலின் உண்மையான காட்சிகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா உக்ரைனை தாக்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, RRR படக்குழு அங்கு படப்பிடிப்பை முடித்திருந்தது.