ரஷ்ய இராணுவ தலைமை கட்டிடத்தில் உக்ரைன் தாக்குதல்: பலர் உயிரிழந்து இருப்பதாக தகவல்
கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய படைகளின் தலைமை கட்டிடத்தில் உக்ரைனிய படைகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் பலர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய படையின் தாக்குதல்
கிழக்கு உக்ரைனில் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை வழங்கிய தகவலில், ரஷ்யாவின் தனியார் வாக்னர் இராணுவ குழு தங்கி இருந்த தலைமை கட்டிடத்தில் உக்ரைனிய படை நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியின் ஆளுநர் செர்ஹி கைடாய் உக்ரைனிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பிராந்தியத்தின் மேற்கு பகுதியின் முக்கிய லுஹான்ஸ்க் மையத்தில் உள்ள கதிவ்கா நகரத்தின் ஹோட்டலில் உக்ரைனிய படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர் என தெரிவித்துள்ளார்.
Last night there were reportedly Ukrainian HIMARS strikes on a Wagner base in Kadiivka and a Russian barracks in Melitopol.https://t.co/MEi4Mmc72Phttps://t.co/tsNKIyhvhShttps://t.co/Y8anZqrSuDhttps://t.co/mi1wZCbK2P pic.twitter.com/2mSvQ66P5Q
— Rob Lee (@RALee85) December 11, 2022
இது தொடர்பாக சமூக ஊடகமான டெலிகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் கட்டிடம் பெருமளவு இடிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.
இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உடனடி பதில் எதையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்புகள்
நேர்காணலில் ஆளுநர் செர்ஹி கைடாய், வாக்னர் இராணுவ குழுவின் தலைமை இடமாக செயல்பட்ட ஹோட்டலில் சிறிய பாய் இருந்தது, அதில் பெரும்பாலானோர் இறந்து கிடந்ததை பார்க்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.
கைடாய் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை-யை வழங்கவில்லை என்றாலும், "உயிர் பிழைக்க முடிந்தவர்களில் குறைந்தது 50% பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்துவிடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Wagner Military Base In #Kadiivka 49 km West #Luhansk pic.twitter.com/d3WORm8YDi
— Vijesti (@Vijesti11111) December 11, 2022
அத்துடன் வாக்னர் குழு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் பல உபகரணங்களை திருடியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்னர் குழுவானது கிரெம்ளினுடன் நெருங்கிய உறவுகளை கொண்ட ஒரு தனியார் இராணுவ ஒப்பந்ததாரர் ஆகும், அதன் படைகள் உக்ரைனின் சில பகுதிகளில் சண்டையிடுவதாக அறியப்படுகிறது மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.