போரிலும் பள்ளிக்கு செல்லும் உக்ரைன் மாணவர்கள்
உக்ரைனில் தங்கள் மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பள்ளி ஆண்டு துவக்கம்
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைன் ஒன்றரை ஆண்டை கடந்தும் போராடி வருகிறது.
இந்த நிலையில் உக்ரேனிய பள்ளி மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் பதிவு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'போர் இருந்தபோதிலும், உக்ரேனிய பள்ளி மாணவர்கள் இன்று புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கினர். உக்ரைன் முழுவதிலும் இருந்து வரும் எங்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுடன், முன்னணிப் பகுதிகள், ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் பேசினேன்.
வெற்றிகரமான ஆண்டுக்கு அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாடு முழுவதும் பாதுகாப்பை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நேர்மையாகவும், உறுதியாகவும் இருப்பவர்களுக்கும், மற்றவர்களின் உதவியைப் பெறுபவர்களுக்கும் மிகப்பெரிய கனவுகள் கூட நனவாகும்' என தெரிவித்துள்ளார்.
Despite the war, Ukrainian schoolchildren began the new school year today.
— Володимир Зеленський (@ZelenskyyUa) September 1, 2023
I talked to our teachers and children from all over Ukraine, including the frontline regions, online, and abroad.
I wished them all a successful year. We will make every effort to restore safety across… pic.twitter.com/GVDhblPxZJ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |