உக்ரைனின் அந்த ஒற்றை கோரிக்கை: ஜேர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அதை நிறைவேற்றுமா?
நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்று உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றனர்.
ஆனால் உக்ரைனின் முக்கிய ஆயுத தேவை வேண்டுகோளில் உள்ள ஒற்றை கோரிக்கையான நீண்ட தூர ஏவுகணை வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஜேர்மன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மறுத்து வருகின்றனர்.
??The German government intends to announce the delivery of #Taurus cruise missiles to Ukraine in the near future, T-Online Deutschland reports. pic.twitter.com/YLpN7t8PDP
— KyivPost (@KyivPost) August 10, 2023
ஒருவேளை இந்த நீண்ட தூர ஏவுகணைகள் உக்ரைனிய எல்லையை தாண்டி ரஷ்ய பிராந்தியத்திற்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்த படுமானால் அது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அச்சத்தில் உக்ரைனின் கோரிக்கையை ஜேர்மன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ்(taurus) மற்றும் ATACMS ஏவுகணைகளை வழங்கி ஜேர்மன் மற்றும் அமெரிக்கா உதவ வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகள் உக்ரைனின் வெற்றிக்கு இன்றியமையாதது எனவே அதனை கூட்டாளிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
Ukraine's Foreign Minister urged Germany and the United States to provide long-range Taurus and ATACMS missiles.
— NEXTA (@nexta_tv) August 11, 2023
Dmytro Kuleba assured that they would be used exclusively within Ukraine's borders. https://t.co/hkFFIR9jzb
மேலும் இந்த இரண்டு ஏவுகணைகளையும் உக்ரைனிய எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள் போரின் நீட்சியை குறைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |