அமைதிக்காக நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது! உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து
அமைதிக்காக உக்ரைனை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்று அறிவித்ததை அடுத்து ஐரோப்பிய தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைமையகத்தில் இன்று கூடியது.
இதில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப விதிகளை மாற்றுவது மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் குறித்தும் முக்கிய முடிவுகள் விவாதிக்கபட்டுள்ளது.
அமைதிக்காக நாட்டை கொடுக்க முடியாது
இந்த அவசர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தன்னுடைய நாடு அமைதியை விரும்புகிறது, ஆனால் அதற்காக உக்ரைன் நாட்டை விலையாக கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைனுக்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு செலவினங்களை பல்வேறு நாடுகளும் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளையும் ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.
ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |