உக்ரைனில் மேலும் 2 ரஷ்ய வீரர்கள் போர்க்குற்றத்தை செய்ததாக ஒப்புதல்!
உக்ரைனில் போர்க்குற்ற விசாரணையில் மேலும் 2 ரஷ்ய வீரர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
போரின் இரண்டாவது போர்க்குற்ற விசாரணையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு நகரத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக பிடிபட்ட இரண்டு ரஷ்ய வீரர்கள் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மத்திய உக்ரைனில் உள்ள கோட்டலெவ்ஸ்கா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், போர்ச் சட்டங்களை மீறியதற்காக அலெக்சாண்டர் போபிகின் (Alexander Bobikin) மற்றும் அலெக்சாண்டர் இவானோவ் (Alexander Ivanov) ஆகியோரை 12 ஆண்டுகள் சிறையில் அடைக்குமாறு அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர்.
உக்ரேன் மரியுபோல் நகரத்தில் அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுப்பு!
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு வீரர்களும் உத்தரவுகளைப் பின்பற்றி மனந்திரும்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டார்.
வலுவூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டியில் நின்றிருந்த போபிகின் மற்றும் இவானோவ், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இருந்து கார்கிவ் பகுதியில் உள்ள இலக்குகளை நோக்கிச் சுட்ட பீரங்கிப் பிரிவின் ஒரு பகுதியாக இருப்பதை ஒப்புக்கொண்டனர். ஷெல் தாக்குதல் டெர்ஹாச்சி நகரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தை அழித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
புடினை 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ய முயற்சி நடந்தது! உக்ரைனிய அதிகாரி பரபரப்பு தகவல்
பீரங்கி ஓட்டுநர் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர் என வர்ணிக்கப்படும் இரண்டு படைவீரர்கள் எல்லையைத் தாண்டி ஷெல் தாக்குதலைத் தொடர்ந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"நான் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களில் நான் எனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். நாங்கள் ரஷ்யாவில் இருந்து உக்ரைன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம்," என்று Bobikin நீதிமன்றத்தில் நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
அதேபோல், Ivanov-வும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்காக வருந்துவதாகவும், அதனால் அதிகபட்ச சிறைத்தண்டனையை வழங்காமல் தண்டனையை குறைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. மே 31-ம் திகதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியில் ஜூன் 1 முதல் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்