உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர்கள் உதவி: இதுவரை அமெரிக்கா செய்துள்ள நிதியுதவி எவ்வளவு தெரியுமா?
உக்ரைனுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன்-ரஷ்யா போர்
நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ள உக்ரைன் முயற்சித்ததால், அதன் அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி தாக்குதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை அளித்து வருகின்றன.
உக்ரைன்-ரஷ்யா போர் உலகெங்கிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா போரின் விளைவாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
மேலும், இந்த போர் மூன்றாம் உலகப் போரை தூண்டி விடும் அபாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உதவி
இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அறிவித்துள்ளது.
இதில் டாங்கிகள், ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதங்கள் அடங்கும் என கூறப்படுகிறது.
தன் மூலம், போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய மொத்த உதவித் தொகை 66.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இந்த உதவித் தொகை ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் செய்யப்படும் இறுதி ஒதுக்கீடுகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், தனது பதவிக் காலத்தில் உக்ரைனுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஜோ பைடன் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |