உக்ரைன் இந்தாண்டு இறுதிக்குள் இதை செய்யும்: பிரித்தானியா பாதுகாப்புத் துறை அமைச்சர் கருத்து
உக்ரைன் இந்தாண்டு இறுதிக்குள் கிரிமியாவை விடுவிக்க முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் தற்போதைய சூழ்நிலையில், இருநாட்டு ராணுவங்களும் கைப்பற்றிய பகுதிகளை தக்கவைத்து கொள்ளவும், இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றவும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வான் தாக்குதல் அரங்கேற்றியது, இதற்கு பதிலடியாக உக்ரைனும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ட்ரோன் தாக்குதலை அரங்கேற்றியது.
இதற்கிடையில் உக்ரைன் மீதான போர் தாக்குதலில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஆயுதப்படை சமீபத்தில் தகவல் வெளியிட்டு இருந்தது.
ஆனால் போர் தொடங்கி 15 மாதங்களை கடந்து விட்ட நிலையில் உக்ரைனிய தரப்பு இழப்புகள் குறித்து எந்தவொரு உறுதியான கணக்குகளும் இருநாட்டு தரப்பில் இருந்தும் இதுவரை தெளிவாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கருத்து
இந்நிலையில் உக்ரைனிய ஆயுதப் படையால் இந்தாண்டின் இறுதிக்குள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிரிமியாவை விடுவிக்க முடியும் என பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர் பென் வாலஸ் (Ben Wallace) தெரிவித்துள்ளார்.
#British Defense Minister Ben #Wallace admitted that the Armed Forces of #Ukraine will be able to liberate #Crimea before the end of this year.
— NEXTA (@nexta_tv) June 2, 2023
The Ukrainian military has already begun to clear the front line before a possible counteroffensive.
Wallace also expressed doubts… pic.twitter.com/RdtfE7U64n
அத்துடன் உக்ரைன் சாத்தியமான எதிர் தாக்குதலுக்கு முன்பாகவே போரின் முன்வரிசையில் உள்ள பல பகுதிகளை அகற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் உக்ரைன் நோட்டோவில் இணையுமா என்பது குறித்த சந்தேகங்களையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.