உலக தலைவர்கள் கூடியுள்ள ஜி7 மாநாடு: ஜப்பான் வந்தடைந்தார் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜப்பானின் ஹிரோஷிமா-விற்கு சனிக்கிழமையான இன்று வருகை புரிந்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் சுற்றுப்பயணம்
போர் தீவிர கட்டத்தை எட்டி வரும் நிலையில், ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட தேவையான ஆயுத உதவி கோரி உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடந்த வாரங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த நேரடி சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் புதிய ராணுவ உதவிகளை அதிரடியாக அறிவித்தனர்.
Zelenskyy arrives to G7 summit in Japan. Footage by @nhk_news shows him landing in Hirosima.
— Euromaidan Press (@EuromaidanPress) May 20, 2023
Reportedly, the fighter jet coalition and the peace summit will be topics of discussion at the G7 meetingpic.twitter.com/3pfduPLQpg
அமெரிக்காவும் சமீபத்தில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தியது, இதற்கிடையில் ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேரடியாக தோன்றுவார் என்று தகவல்கள் வெளியானது.
ஜப்பான் வந்த ஜெலென்ஸ்கி
இந்நிலையில் முக்கிய உலக தலைவர்கள் கூடியுள்ள ஜி7 மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்வதற்காக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சனிக்கிழமையான இன்று ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு விஜயம் செய்துள்ளார்.
AP
ஜி7 கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் வீடியோ வாயிலாக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானிய பிரதமர் Fumio Kishida கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் போது, இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ஜெலென்ஸ்கி நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார்.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ஆகியோர் கலந்து கொண்டுள்ள ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா, அணுகுண்டு வீசி தாக்கப்பட்ட முதல் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
AP