ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து வழங்கிய உதவி..! நன்றி கூறிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உதவிகளை வழங்கிய ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து நாட்டிற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான உதவி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளிடம் இருந்தும் ஆயுத, மருத்துவ மற்றும் பொருளாதார உதவிகளை உக்ரைன் கோரி வருகிறது.
அந்த வகையில் ஜேர்மனி இரண்டு உள்நாட்டு ஏவுகணை ஏவுதல் அமைப்பை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.
ஜேர்மனியிடம் உக்ரைன் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையான நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க தயக்கம் காட்டினாலும், மற்ற பிற உதவிகளை உக்ரைனுக்கு ஜேர்மனி தொடர்ந்து வழங்கி வருகிறது.
Sky News
இந்நிலையில் ராக்கெட் ஏவுதல் அமைப்பை வழங்கிய ஜேர்மனிக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி வழங்கிய இந்த 2 உள்நாட்டு ஏவுகணை ஏவுதல் அமைப்பும் புதன்கிழமை உக்ரைனுக்கு அனுப்பட்டது.
இதைப்போல உக்ரைனின் முன்கள வீரர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளை வழங்கிய நெதர்லாந்துக்கும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
EPA
கண்ணிவெடி அகற்றும் உபகரணம்
இந்த வரிசையில் கண்ணி வெடிகளை அகற்றும் உபகரணத்துடன் உள்ளடக்கிய புதிய உதவி தொகுப்பை அனுப்பி வைக்க தயாராக இருக்கும் அஜர்பைஜான் நாட்டிற்கும் உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற உதவும் உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை உக்ரைனில் விரைவாக அமைக்க வேண்டும் என்றும், இந்த பணிகள் தசாப்தங்களில் இல்லாமல் ஒற்றை ஆண்டில் முடிக்கப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |