புதிய ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ட்ரோன்களை வீழ்த்திவரும் உக்ரைன்
உக்ரைன் தனது வான்பரப்பை பாதுகாக்க புதிய வகை விமானங்களை பயன்படுத்து ரஷ்யா ஏவும் ட்ரோன்களை வீழ்த்திவருகிறது.
ஆகஸ்ட் 8-ஆம் திகதி ஒரு விசித்திரமான விமானத்தின் வீடியோ வெளியாகி, இது ரஷ்ய ட்ரோன்களை வீழ்த்த பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின.
இந்த விமானம் வழக்கமான போர் விமானம் போல் அல்லாமல் வித்தியாசமான வடிவமைப்புடன் காணப்படுகிறது.
இது குறைந்த செலவில் அதிக செயல்திறனுடன் ட்ரோன்களை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
வீடியோ குறித்து Militarnyi எனும் உக்ரேனிய ஊடகத்தில் வெளியான தகவல்களின்படி, செக் தயாரிப்பான Zlin Z-137 civilian turboprop விமானத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், The Aviationist ஊடகத்தில் வெளியான தகவல்கள், இது ஒரு சோவியத் கால Z-37 Cmelak விமானம் என்றும், இது 1960 முதல் 1980 காலகட்டத்தில் Czechoslovakia-வில் தயாரிக்கப்பட்ட, குறைந்த உயரத்திலும் குறைந்த வேகத்திலும் பறக்கக்கூடிய விமானம் என கூறுகின்றன.
உக்ரைன் ஏற்கெனவே, சோவியத் கால Yak-52 விமானத்தை பயன்படுத்துவதாகவும், அதில் பின் இருக்கையில் இருக்கும் வீரர் shortgun மற்றும் பல சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி ட்ரோன்களை வீழ்த்திவருவதாகவும் தகவல்கள் இருக்கின்றன.
இந்த விமானங்கள் ரஷ்ய ட்ரோன்கள் பறக்கும் உயரத்தில் பறந்து, அவற்றை துல்லியமாக வீழ்த்தும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.
இது உக்ரைனின் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும், இது எதிர்கால போர் நுட்பங்களில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |