உக்ரைனின் மிகப்பாரிய கடற்படை உளவு கப்பலை அழித்த ரஷ்யா
உக்ரைனின் மிகப்பாரிய கடற்படை உளவு கப்பலை ரஷ்யா அழித்துவிட்டது.
உக்ரைன் கடற்படையின் மிகப் பாரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol) என்ற இராணுவ உளவு கப்பல், ரஷ்யாவின் கடல் ட்ரோன் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் Danube நதியின் வாயிலில் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பது அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிம்ஃபெரோபோல் என்பது Laguna வகை நடுத்தர உளவு கப்பல். இது ரேடியோ, எலெக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிகல் கண்காணிப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.
2019-ல் தொடங்கப்பட்ட இந்த கப்பல், 2021-ல் உக்ரைன் கடற்படையையில் இணைக்கப்பட்டது.
ரஷ்யாவின் கடல் ட்ரோன் (unmanned high-speed boat) இந்த கப்பலை தாக்கியது. இந்த தாக்குதலில் ஒரு நபர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.
இது கடல் ட்ரோன் மூலம் உக்ரைன் கடற்படை கப்பலை அழிக்கும் முதல் வெற்றிகரமான முயற்சி என TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிகாரிகளும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். இது உக்ரைன் கடற்படைக்கு பாரிய இழப்பாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine naval ship sunk, Simferopol drone attack, Russian sea drone strike, Ukraine Navy Simferopol, Laguna-class ship destroyed, Danube River military strike, Russia Ukraine war update, Ukrainian reconnaissance vessel, Naval drone warfare, Odessa region attack