ரஷ்யாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்திய ஒற்றை ட்ரோன் தாக்குதல்: நெருப்பு கோளமான விமானம்
உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானம் ஒன்று மொத்தமாக தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில்
சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆய்வுக்கு பின்னர் உறுதி செய்துள்ளனர். அது Tupolev Tu-22 போர் விமானம் எனவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 ராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
@getty
தொடர்புடைய ட்ரோன் தாக்குதலானது பாரிய சேதத்தை ஏற்படுத்தும் என கருதவில்லை என்றே ரஷ்ய தரப்பு கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் தரப்பில் இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை தாக்க ரஷ்யாவால் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
தீவிரவாதச் செயலால் உயிரிழப்பு
ரஷ்ய நேரப்படி சனிக்கிழமை பகல் 10 மணியளவில் தொடர்புடைய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ஒரு விமானம் சேதமடைந்தது; தீவிரவாதச் செயலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
@X
மட்டுமின்றி, Soltsy-2 ராணுவ விமான தளமானது உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 400 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், Tu-22 போர் விமானமானது சிரியா, செச்சினியா, ஜார்ஜியா மற்றும் மிக சமீபத்தில் உக்ரைனுக்கு எதிராகவும் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |