மகள் கண்முன்பே உக்ரேனிய தந்தை சுட்டுக்கொலை! ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி சம்பவம்
உக்ரேனிய வழக்கறிஞர் ஒருவர் பிரித்தானியாவின் மாட்ரிட் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொலை
உக்ரைனைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆண்ட்ரி போர்ட்னோவ் (Andriy Portnov) ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வசித்து வந்தார்.
இவர் கடந்த 2022ஆம் ஆண்டு சூலை மாதம், இராணுவ வயதுடைய ஆண்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட போதிலும், உக்ரைனை விட்டு வெளியேறியவர் ஆவார்.
இந்த நிலையில் மாட்ரிட் நகரில் உள்ள புகழ்பெற்ற அமெரிக்கப் பாடசாலையில் தனது பிள்ளைகளை இறக்கிவிட போர்ட்னோவ் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், போர்ட்னோவை துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டதில் தனது மகள் கண்முன்பே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து 9.15 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பழிவாங்கும் கொலை
துப்பாக்கிச் சூடு நடந்த இரண்டு மணிநேரத்திற்கு பிறகும் அவரது சடலம் அங்கேயே இருந்துள்ளது; நீதிபதியின் அனுமதிக்குப் பிறகுதான் கொண்டுசெல்லப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், காவல்துறை இன்னும் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
எனினும் சில வட்டாரங்கள் இதனை பழிவாங்கும் கொலை என்று குறிப்பிட்டுள்ளன. மேலும், தொழில்முறை மோதலில் வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான போர்ட்னோவ் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தன்னை 'ரஷ்ய சார்பு' என அழைத்த உக்ரேனிய செய்தி தளத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் போர்ட்னோவ் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |