முன்னாள் உக்ரைன் அதிபர் உதவியாளர் சுட்டுக்கொலை: உறுதிப்படுத்திய ஸ்பெயின் அதிகாரிகள்!
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர் மாட்ரிட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி உதவியாளர் சுட்டுக்கொலை
உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் முன்னாள் மூத்த உதவியாளரான 51 வயதுடைய ஆண்ட்ரி போர்ட்னோவ்(Viktor Yanukovych), மாட்ரிட்டில் புதன்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக ஸ்பானிஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாட்ரிட் நகரின் போசுலோ மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளிக்கு வெளியே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விசாரணை வட்டாரங்களின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் போர்ட்னோவை சுட்டுக் கொன்றுள்ளனர்.
உள்துறை அமைச்சக வட்டாரங்கள், "பல நபர்கள் அவரை முதுகு மற்றும் தலையில் சுட்டனர்" என்றும், பின்னர் அவர்கள் அருகிலுள்ள வனப்பகுதிக்கு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தன.
உள்ளூர் வானொலி நிலையமான கடேனா எஸ்.இ.ஆர் (Cadena SER) அளித்த தகவலின் படி, காலை 9:15 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக காலே அமெரிக்கா (Calle America) பகுதிக்கு விரைந்தனர்.
போர்ட்னோவ் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பவ இடத்தில் அவசர சேவை வாகனங்களும், பொலிஸ் தடுப்புகளும் காணப்பட்டன.
போர்ட்னோவ், 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் ஆரஞ்சு புரட்சியின் போது பதவியிலிருந்து அகற்றப்பட்ட விக்டர் யானுகோவிச்சின் கீழ் ஒரு உயர்மட்ட அதிகாரியாக பணியாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |