24 மணி நேரத்தில்... நிலைகுலைய செய்த உக்ரைன்: புடினின் கருங்கடல் கடற்படைக்கு பின்னடைவு
கடல் ட்ரோன்களால் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீது பாரிய தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4,754 டன் ரஷ்ய டேங்கர் கப்பல்
தொடர்புடைய தாக்குதலானது 4,754 டன் ரஷ்ய டேங்கர் கப்பல் மீது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ஜின் அறை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என கப்பல் ஊழியர்கள் உதவிக்காக முறையிட்டுள்ளனர்.
Credit: East2West
463 அடி நீளம் கொண்ட அந்த எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பலானது மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறை பகுதியளவில் சேதமடைந்ததால், 11 பேர் கொண்ட குழுவினர் கண்ணாடி உடைந்து சிராய்ப்புகளால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது ட்ரோன் தாக்குதல் என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைன் கடற்படையின் ஒருங்கிணைப்புடன் 450 கிலோ TNT வெடிமருந்தை பயன்படுத்தி, தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Credit: East2West
3 பில்லியன் பவுண்டுகள் கிரிமியா பாலம்
தாக்குதலுக்கு இலக்கான டேங்கர் கப்பலானது, எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் என்றாலும், ரஷ்யா மற்றும் சிரியாவுக்கு இடையே வெடிமருந்துகளையும் ஏற்றிச் சென்றுள்ளது.
மேலும் தாக்குதல் நடந்தது புடினுக்கு மிகவும் விருப்பமான 3 பில்லியன் பவுண்டுகள் செலவிட்டு உருவாக்கப்பட்ட கிரிமியா பாலம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்பட்டது. அதன் பின்னரே, சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்ததாக உறுதி செய்யப்பட்டது.
Credit: East2West
மேலும், 2019ல் இருந்தே சிரியா விவகாரம் தொடர்பில் சர்வதேச கடற்பகுதியில் இந்த கப்பலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |