இந்திய தேசியக்கொடியை தூக்கி எறிந்த உக்ரைன் பாடகி மீது வழக்கு (வீடியோ உள்ளே)
இந்திய மாநிலம், மஹாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் பாடகி உமா சாந்தி இந்திய தேசியக்கொடியை தூக்கி எரிந்து அவமதித்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேசியக்கொடி அவமதிப்பு
மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் முந்த்வாவில் உள்ள கிளப்பில் நேற்று இரவு இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இசைக்குழுவான சாந்தி பீப்பிள்ஸின் உக்ரேனிய பாடகி உமா சாந்தி கலந்து கொண்டார்.
அப்போது, உமா சாந்தி தனது இரு கைகளிலும் தேசியக் கொடியை பிடித்தபடி நடனமாடினார். பின்னர், பார்வையாளராகள் இருக்கும் கூட்டத்தை நோக்கி தனது கைகளில் இருந்த தேசியக்கொடியை தூக்கி எறிந்தார்.இதனால், இசை நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
உக்ரேனிய பாடகி மீது புகார்
இந்நிலையில், இசை நிகழ்ச்சியின் போது உக்ரேனிய பாடகி உமா சாந்தி இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோரேகான் பார்க் காவல்நிலையத்தில் அவர் புகார் செய்யப்பட்டது.
Instagram
பின்னர், பாடகி உமா சாந்தி, நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திக் மெரீன் ஆகியோர் மீது புனே பொலிசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல் ஆய்வாளர் விஷ்ணு தம்ஹானே தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலானதை தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த சாந்தி பீப்பிள்ஸின் இசைக்குழுவானது கடந்த வாரம் பெங்களூரு மற்றும் போபாலில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடதக்கது.
Pune : Controversy Erupts As Singer Disrespects National Flag During Performance During A Pre-Independence Day Celebrations In A Musical Concert . Pune Police Files Case Against Singer and Organiser. #Singer #NationalFlag #UmaShanti #Pune #ViralVideo https://t.co/hRd1BtXqLC pic.twitter.com/AcPEcLsXSF
— Pune Pulse (@pulse_pune) August 15, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |