உக்ரைனிய துப்பாக்கி சுடும் வீரரின் துல்லியமான குறி…சுருண்டு விழுந்த ரஷ்ய வீரர்: வீடியோ ஆதாரம்
ரஷ்ய காலாட்படை வீரரை சுட்டு வீழ்த்திய உக்ரைனிய துப்பாக்கி சுடும் வீரர்.
550 மீட்டர் தொலைவிலும் குறி தவறாமல் அடித்த உக்ரைனிய துப்பாக்கி சூடு வீரர்.
ரஷ்ய படையின் காலாட்படை வீரரை உக்ரேனிய துப்பாக்கி சுடும் வீரர், சுட்டு வீழ்த்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் நான்கு முக்கிய நகரங்கள் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுவதாக ஜனாதிபதி புடின் அறிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த ஆக்கிரமிப்பு அறிவிப்பை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.
Ukrainian sniper takes out a Russian infantry from a distance of 550m.#Russia #Ukraine pic.twitter.com/uZV9ZWM4wC
— BlueSauron?️ (@Blue_Sauron) October 3, 2022
புடின் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த லைமன் நகரத்தை உக்ரைனிய ஆயுதப் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மீட்டெடுத்தனர்.
மேலும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்த தகவலில், ஜனாதிபதி புடினால் ரஷ்ய பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரத்தில் உள்ள இரண்டு குடியேற்றங்களையும் உக்ரைனிய ஆயுதப் படை விடுவித்து இருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனின் ஒரு பகுதியில், 550 மீட்டர் தொலைவில் நின்றுக் கொண்டு இருந்த ரஷ்ய காலாட்படை வீரரை உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் துல்லியமாக சுட்டு வீழ்த்தி உள்ளார்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: அரச குடும்பத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் தகவல்: உடல் மொழி நிபுணர் விளக்கம்!
அத்துடன் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.