ரஷ்யாவுடன் போர் நீடிக்கும் நிலையிலும் துருக்கி மக்களுக்காக களமிறங்கிய உக்ரைன் வீரர்கள்!
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் வீரர்கள் சென்றுள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம்
ரஷ்யாவுடனான போர் தொடரும் நிலையிலும் மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் வீரர்கள் அங்கு சென்றனர். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21000-ஐ தாண்டியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Reuters
உக்ரைன் வீரர்கள்
துருக்கி, சிரியாவுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மீட்புப் படையினரை அனுப்பிவைத்துள்ளனர்.
அந்த வகையில் உக்ரைனில் போர்ச்சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையிலும் அந்நாட்டு வீரர்களும் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக துருக்கி விரைந்துள்ளனர்.
88 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.