போர் தொடங்கியதில் இருந்து உலகில் வெறுப்பு அதிகரித்துள்ளது - ஐ.நா சபை தலைவர் காட்டம்
இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து உலகில் வெறுப்பு பேச்சு, குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, ஐ.நா பொதுச்சபையின் 78வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேஸ் - ஹமாஸ் போர்
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேஸ் - ஹமாஸ் போர் தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஐ.நா பொதுச்சபையின் 78வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், அக்டோபர் 7 முதல் உலகில் வெறுப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
நம் உலகில் வெறுப்புக்கு இடம் இல்லை
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'அக்டோபர் 7ஆம் திகதி முதல் உலகம் வெறுப்பு, வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்களில் கூர்மையான மற்றும் கவலைக்குரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது முற்றிலும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் உங்களுக்கு அருகில் அல்லது தொலைவில், ஒரு தெளிவான செய்தியுடன் உங்களை அணுகுகிறேன்: நம் உலகில் வெறுப்புக்கு இடம் இல்லை' என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எந்தவொரு அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவதை பிரான்சிஸ் கடுமையாகக் கண்டித்தார். ஒரு நபரின் இனம், மதம் ஆகியவற்றில் வேரூன்றிய எந்த அச்சுறுத்தல் அல்லது வன்முறை தூண்டுதலையும் அவர் நிராகரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |