காசாவில் பணிப்புரிந்த ஐ.நாவின் இந்திய உறுப்பினர் உயிரிழப்பு: இஸ்ரேலுக்கு ஐ.நா கண்ட,னம்
காசாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பணிப்புரிந்த இந்தியர் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் மனிதாபிமான வழியின் முக்கிய மூலோபாய நகரான ரஃபா மீது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்ரேல் செயல்படுத்தாத நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தேவையான வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை வழங்காமல் இடை நிறுத்தியுள்ளது.
இருப்பினும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு நகரான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியர் உயிரிழப்பு
இந்நிலையில் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
ரஃபா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலின் போது, ஐ.நாவின் இந்திய உறுப்பினர் பயணித்த வாகனம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் விவரம் இன்னும் முழுவதுமாக தெரியாத நிலையில், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி என்று கூறப்படுகிறது.
அதே சமயம் ஐ.நாவுக்கான இந்திய பணியாளர் கொல்லப்பட்டத்திற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |