ஆப்கானிஸ்தானில் பெண் ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுக்கும் தாலிபான்கள்!
தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண்களை வேலைக்கு செல்ல விடாமல் தாலிபான்கள் தடுப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.நா பெண் ஊழியர்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணிக்கு செல்ல கூடாதென தாலிபான்கள் நாடு முழுதும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஐக்கிய நாடுகளில் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய கூடாதென உத்தரவிட்டுள்ளனர்.
@afp
இதற்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் அத்தகைய உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்துள்ளார்.
கிழக்கு நங்கர்ஹர் மாகாணத்தில் ஐ.நா பெண் ஊழியர்கள் வேலை செய்யவிடாமல் தடுக்கப்படுவதாக ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக்குழு தெரிவித்துள்ளது.
@RAHMAT GUL/THE ASSOCIATED PRESS
நாடு முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களை வேலைக்கு செல்லக்கூடாது என தாலிபான்கள் டிசம்பர் மாத தாலிபான் உத்தரவிலிருந்து ஐநா இதுவரை விலக்கு அளித்துள்ளது.
தடையை ஏற்க மறுக்கும் ஐ.நா
இது குறித்து ஜ.நாவின் செய்து தொடர்பாளர் டுஜாரிக் கூறுகையில், எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் இன்னும் வரவில்லை, ஆனால் ஐ.நா. காபூலில் புதன்கிழமை தாலிபான்களுடன் "சில தெளிவுகளைப் பெற" சந்திப்புகளை நடத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.
@afp
ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸைப் பொறுத்தவரை, "அத்தகைய தடை எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
”இது எளிய மக்களுக்காக செய்யப்படும் உதவியை தடுத்து நிறுத்துவதாகும். மேலும் ஐ.நாவால் நிறைய பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைவார்கள் என ஐ.நா தரப்பு கூறியுள்ளது.
துயரை சந்திக்கும் மக்கள்
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தடைக்குப் பிறகு, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் முழு செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டன, ஆப்கானிஸ்தானின் 38 மில்லியன் குடிமக்கள் மீது மேலும் துயரத்தை சந்திக்கின்றனர்.
@afp
அவர்களில் பாதி பேர் பசியால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவவே ஐ.நாவின் உதவி மையங்கள் செயல்படுகின்றன.
"பெண் ஊழியர்கள் இல்லாமல் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் செயல்பட முடியாது, மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்க முடியாது என்பதை நாங்கள் நடைமுறை அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறோம்," என்று டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
தாலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் நங்கர்ஹரில் இந்த விவகாரம் குறித்த தகவல்களை பற்றி விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார்.