கடலுக்கடியில் கண்ணிவெடிகளை அகற்றும் ஆளில்லா ட்ரோன்கள்: உக்ரைனுக்கு வாரிவழங்கிய பிரித்தானியா!
உக்ரைனுக்கு கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ஆறு ஆளில்லா ட்ரோன்களை வழங்கியது பிரித்தானியா.
பிரித்தானிய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து பயிற்சி அளிக்கும்.
கடற்கரையோர கண்ணிவெடிகளை அழிக்க, கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ஆறு ஆளில்லா ட்ரோன்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில், ஆரம்பம் முதலே உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நிதி உதவிகளையும், இராணுவ உதவிகளையும் பிரித்தானியா வழங்கி வருகிறது.
EPA
இந்தநிலையில், கடலுக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவும், ஆறு ஆளில்லா ட்ரோன்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
இலகு எடை கொண்ட தன்னாட்சி வாகனம், இவை ஆழமற்ற கடலோர சூழல்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, 100 மீட்டர் ஆழத்தில் வரை திறம்பட செயல்பட்டு சென்சார்களைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளைக் கண்டறியவும், அவற்றை அடையாளம் கண்டு அதனை உக்ரைன் கடற்படை அழிக்க முடியும்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
UK DAILY NEWS
கூடுதல் செய்திகளுக்கு: கட்டணங்கள் செலுத்தப்படும் என்பது மாயை...அது நடக்கப் போவதில்லை: டோரி எம்.பி எச்சரிக்கை
மேலும் பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள தகவலின் படி, பிரித்தானிய கடற்படை, அதன் அமெரிக்க பங்காளிகளுடன் சேர்ந்து, உக்ரேனிய கடற்படை வீரர்களுக்கு இந்த உபகரணங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கும் எனத் தெரிவித்துள்ளது.