பிரபலமான டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கை திறக்க முடிவு செய்த அமெரிக்கா! எதற்கு தெரியுமா?
கோரனாவால் கடந்த 10 மாதங்களாக மூடியிருக்கும் பிரபலமான டிஸ்னிலேண்ட் தீம் பார்க் அமெரிக்காவின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்காக திறக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிஸ்னிலேண்ட் தீம் பார்க், அதன் 65 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக 2020-ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கு அதன் வாயில்களை மூடுவதாக அறிவித்தது.
கொரோனாவின் பரவல் காரணமாக மார்ச் 12 அன்று மூடப்பட்டது. உலகிலேயே கொடூரமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ள நிலையில், இன்று வரை டிஸ்னிலேண்ட் மூடிய நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், கூடிய விரைவில் அது மிகப் பெரிய காரணத்துக்காக திறக்கப்படவுள்ளது. கலிஃபோர்னியாவின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இந்த வாரம் மிகப்பெரிய கோவிட் -19 தடுப்பூசி தளமாக மாற உள்ளது என்று ஆரஞ்சு கவுண்ட்டி அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர்.
உலகிலேயே கொரோனாவால் மிககே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. தொற்று தொடங்கியதிலிந்து இதுவரை கிட்டத்தட்ட 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 381,000 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், அதிக மக்கள் தொகை கொண்ட அமெரிக்க அரசு அதன் தடுப்பூசி விகிதத்தில் பின்தங்கியிருக்கிறது.
அதேபோல், அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான கலிபோர்னியா, அதன் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தில் 50 மாகாணங்களில் 43வைத்து இடத்தையே பெற்றுள்ளது.
இந்நிலையில், டிஸ்னிலேண்ட் ரிசார்ட் ஒரு வெகுஜன தடுப்பூசி தளமாக திறக்கப்படுகிறது. இதன்முலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.