யேமன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் விருப்பம்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு!
யேமன் போரை முடிவுக்கு கொண்டுவருவது அமெரிக்க அரசின் முதன்மை முன்னுரிமை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழன் கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள்-ஈரானுடன் தொடர்புடைய ஷியா கிளர்ச்சியாளர்கள் மற்றும் சுன்னி அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து, யேமனின் ஜனாதிபதி அப்துல் ரப்பு மன்சூர் ஹாதி பதவி விலகினார்.
பின் இந்த போரானது மார்ச் 2015ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளருக்கும் அமெரிக்கப்படைகளின் உதவி கொண்ட சவுதி அரசிற்கும் எதிரான போராக மாறியதை தொடர்ந்து, செப்டம்பர் 2015 இல் ஜனாதிபதி அப்துல் ரப்பு மன்சூர் ஹாதி தனது ராஜினாமாவை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார்.
இதனால் மீண்டும் தீவிரமடைந்த போர் இதுவரை எத்தகைய முழுமையான தீர்வும் எட்டப்படாமல் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி வியாழன்கிழமை தெரிவித்துள்ள கருத்தில், யேமனில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்றப்பட்ட போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இருதரப்பும் முடிவு செய்து இருப்பது வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார்.
மேலும் 7 ஆண்டுகள் நடைப்பெற்ற போர் நடவடிக்கையில் மிகவும் அமைதியான தருணம் இது எனவும், இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யேமன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அமெரிக்காவின் எனது அரசு அதிக முன்னுரிமை வழங்குவதாகவும், யேமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை கொண்டுவருவது தான் அமெரிக்காவின் முதன்மை நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 2,00,000 குழந்தைகளை ரஷ்யா வலுகட்டாயமாக....உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!
இந்த போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து விதமான முன்னெடுப்புகளையும் அமெரிக்க அரசு செய்யும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.