மாதவிடாய் விடுப்பு கேட்ட பெண்ணிடம் ஆதாரம் கேட்ட சீன பல்கலைக்கழகம்
மாதவிடாய் விடுப்பு கோரியை பெண்ணிடம் பேண்டை கழற்றி நிரூபிக்க வேண்டுமென சீன பல்கலைக்கழகம் கூறியது பேசுபொருளாகியது.
மாதவிடாய் விடுப்பு
மாதவிடாய் விடுப்பு கோரிய பெண்ணிடம் பேண்டை கழற்றி நிரூபிக்க வேண்டுமென பெய்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கெங்டன் இன்ஸ்டிடியூட் கட்டாயப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவும் கடந்த 15-ம் திகதி வெளியாகி பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த வீடியோவில், "மாதவிடாய் விடுப்பு கோரும் பெண , அனைவருக்கும் இத்தகைய பரிசோதனைகள் நடத்தப்படுகிறதா என என கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு அந்த பெண் ஊழியர், இது இந்த பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை கொள்கை. விடுப்பு வேண்டும் என்றால் பேண்டை கழற்றி நிரூபிக்க வேண்டும்" என்கிறார்.
இதற்கு சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் 16-ம் திகதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்களுடைய பல்கலைக்கழகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மருத்துவ நடைமுறை விதிகளைப் பின்பற்றினோம். மாணவியின் சம்மதம் பெற்ற பின்னரே சிகிச்சைகள் செய்வோம். ஆனால், எந்த கருவியை வைத்தோ பரிசோதனை செய்யவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பெண்ணிற்கு விடுப்பு மறுத்த பெண் ஊழியர் பேட்டி அளிக்கையில், "பெண்கள் விடுப்பு பெறுவதற்காக மாதவிடாயை காரணம் காட்டுவதால் தான் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |