போர் ஒரு பக்கம்... அதிகரிக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை மறுபக்கம்: சிறுமிகளையும் விட்டுவைக்காத கொடூரம்
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூடானில் நூற்றுக்கணக்கான பெண்கள் பலாத்காரம் அல்லது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்
சூடானில் ஏப்ரல் 15ம் திகதியில் இருந்து ராணுவத்திற்கும் RSF என்கிற துணை ராணுவத்திற்கு இடையே போர் நடந்து வருகிறது.
@afp
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் Abdalla Hamdok-க்கு எதிராக அக்டோபர் 2021ல் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட ராணுவம் மற்றும் துணை ராணுவம் தற்போது யார் அதிகாரத்திற்கு வருவது என்ற சண்டையில் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.
போர் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து சூடானில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சூடானில் இருந்து சுமார் 926,000 பேர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
மட்டுமின்றி மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையிலேயே, சூடானில் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
12 வயதேயான சிறார்களும் பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து தப்பவில்லை என்றே தெரியவந்துள்ளது. தலைநகர் கார்ட்டூமில் மட்டும் 60 பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளனர். தெற்கு டார்பூர் பகுதியில் 43 பெண்களும், எல் ஜெனினா பகுதியில் 21 பெண்களும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
2 சதவீதம் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது
ஆனால் இது உண்மையான தரவுகள் அல்ல எனவும், சூடானில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதில் 2 சதவீதம் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
@afp
சூடானில் பாலியல் வன்முறையுடன், ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். போர் தொடங்கிய பிறகு பலர் கடத்தப்பட்டனர். மேலும் பல எண்ணிக்கையிலான பெண்கள் மாயமாகியுள்ளதுடன் RSF என்கிற துணை ராணுவத்தினரால் பல பெண்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு RSF மறுப்பு தெரிவித்துள்ளது. போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கிய நிலையில், பல சூடான் பெண்கள் கருவுற்றதாக தகவல் வெளியானது.
இவர்கல் அனைவரும் துஸ்பொஇரயோகத்திற்கு இலக்கானவர்கள் என்றே கூறப்படுகிறது. போர் தொடங்கி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகும், கர்ப்பத்தைத் தடுக்கத் தேவையான மருந்துகளை அணுகுவது பெண்களுக்கு கடினமாக உள்ளது.
எல் ஜெனினாவில் 25 வயது பெண் ஒருவர் இந்த ஜூன் மாதம் மூன்று ஆண்களால் சீரழிக்கப்பட்டுள்ளார். குடியிருப்பில் இருந்து வெளியே சென்ற நேரம் கடத்தப்பட்டு மூவரால சீரழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கிய பின்னர் 3,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். 435 சிறார்கள் கொல்லப்பட்டதுடன், 2025 பேர் காயங்கலுடன் தப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |