UPI பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஏப்ரல் 1 முதல் அமுல்
UPI பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1, 2025 முதல், Google Pay, PhonePe, Paytm போன்ற UPI சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.
ஏப்ரல் 1 முதல் செயலற்ற மொபைல் எண்களுக்கு UPI வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
NPCI (National Payment Corporation of India) வெளியிட்ட அறிவிப்பின்படி, நீண்ட காலமாக செயல்படாத மொபைல் எண்கள் வங்கி கணக்குகளிலிருந்து நீக்கப்படும்.
இதனால், பழைய அல்லது செயல்படாத எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் UPI பரிவர்த்தனையில் தடைகளை சந்திக்கலாம்.
ஏன் இந்த முடிவு?
குற்றச்செயல்களைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இணைய வழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால், செயல்படாத எண்கள் UPI மற்றும் வங்கி கணக்குகளில் தொழில்நுட்ப பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.
தவறான பணப் பரிமாற்றங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில், பழைய எண்ணுகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வேறொருவருக்கு வழங்கப்படும். இது பணம் தவறான பயனர்களுக்குச் செல்வதற்கான ஆபத்தை ஏற்படுத்தும்.
உங்கள் UPI சேவையை தொடர என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மொபைல் எண் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
Jio, Airtel, Vi, BSNL போன்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, உங்கள் எண்ணை செயலில் வைத்திருக்கவும்.
உங்கள் வங்கி கணக்கில் புது எண்ணை சேர்க்க விரும்பினால், உடனே புதுப்பிக்கவும்.
NPCI வங்கி மற்றும் UPI நிறுவனங்களை வாரம் ஒருமுறை செயல்படாத எண்களை புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, உங்கள் எண்ணை செயல்படுத்தி, UPI பரிவர்த்தனைகளை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |