காணாமல் போன உலகின் விலையுயர்ந்த போர் விமானம்: விபத்தில் நீடிக்கும் மர்மம்
அமெரிக்காவுக்கு சொந்தமான உலகின் விலையுயர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான போர் விமானம்
உலக அளவில் அதிக ராணுவ பலம் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது, அதற்கேற்ப அதிநவீன போர் விமானங்கள், ராணுவ ஆயுதங்கள் மற்றும் அதற்கான தளவாடங்கள் ஆகியவற்றை அமெரிக்க கட்டமைத்து வைத்து இருக்கிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை உலகின் விலையுயர்ந்த போர் விமானமான அமெரிக்காவின் எப்.35 வானில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென காணாமல் போனது.
அமெரிக்காவின் தனி அடையாளமாக விளங்கும் இந்த எப்.35 ரக போர் விமானம் சுமார் ரூ650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.
இந்த எப்.35 ரக போர் விமானம் தெற்கு கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து திடீரென காணாமல் போனது.
அதிர்ஷ்டவசமாக அதன் விமான பாராசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினார். ஆனால் விமானம் என்னவானது என கண்டுபிடிக்க முடியாமல் அதை தேடும் பணி தீவிரமாக நடைபெற தொடங்கியது.
கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள்
இந்நிலையில் வில்லியம்ஸ்பர்க் கவுண்டி பகுதியில் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாததால் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க போர் விமானத்தின் விபத்துக்கு பின்னால் மர்மம் நீடிப்பது அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |