இரண்டு நாடுகளில் குண்டு மழை பொழிந்த அமெரிக்க போர் விமானங்கள்! வெளியான பரபரப்பு வீடியோ
ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் குழுவை குறிவைத்து அமெரிக்க வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் மீது போராளிகள் குழு நடத்திய டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆயுத கிடங்கை குறிவைத்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற Kataib Hezbollah மற்றும் Kataib Sayyid al-Shuhada போராளிகள் குழு பயன்படுத்தும் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்து பென்டகன் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால், சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 5 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
Listen to them! These were #USAF's F-15E Strike Eagles while were flying low over Al-Qaem after their crew dropped precision guided bombs at headquarters of #PMU's Katayeb Sayyid Al-Shuhada (14th Brigade) killing 4 militiamen & causing injuries in 3 others. https://t.co/GtS9moaQbY pic.twitter.com/IrBXQvf0lY
— Babak Taghvaee - Μπάπακ Τακβαίε - بابک تقوایی (@BabakTaghvaee) June 28, 2021
அதேசமயம், அமெரிக்க தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதாகவும், கிட்டதட்ட 3 பேர் காயமடைந்ததாக சிரிய அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.