அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து: அரிசோனா ஜெட் விபத்தில் ஒருவர் பலி
அமெரிக்காவில் நடந்துள்ள மற்றொரு விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
அமெரிக்காவின் அரிசோனா(Arizona) மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்டேல் நகராட்சி விமான நிலையத்தில்(Scottsdale Municipal Airport) திங்களன்று ஒரு வணிக ஜெட் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.
லேர்ஜெட் 35A ரக விமானம்(Learjet 35A) தரையிறங்கிய பின் ஓடுபாதையிலிருந்து விலகி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்ஃப்ஸ்ட்ரீம் 200 வணிக ஜெட் விமானத்துடன் மோதியதாக பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (FAA) உறுதிப்படுத்தியது.
விபத்தில் ஒருவர் விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டதாகவும், மூன்று பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு விமானங்களிலும் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியவில்லை.
விசாரணை முடியும் வரை ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்திற்குள் விமானங்கள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக FAA செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிக்கியிருந்த நபரை மீட்க தீயணைப்பு துறை உட்பட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐந்து பேர் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் உடனடியாக அதிர்ச்சி சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து அரங்கேறும் விமான விபத்து
இந்த கோர விபத்து, அமெரிக்காவில் சமீபத்திய விமான விபத்துகளில் ஒன்றாகும்.
DEVELOPING: Plane owned by Mötley Crüe singer Vince Neil crashes into parked jet at Scottsdale Airport in Arizona.
— BNO News (@BNONews) February 11, 2025
Officials confirm at least 1 person was killed, 4 injured. It's unknown if Neil was on board the plane. pic.twitter.com/t1etMwP75A
கடந்த எட்டு நாட்களில் நடந்த இரண்டு பெரிய சம்பவங்களைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
ஜனவரி 29 ஆம் திகதி வாஷிங்டன், டி.சி அருகே ஒரு வணிக ஜெட் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஜனவரி 31 ஆம் திகதி பிலடெல்பியாவில் மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |