23 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக்கை விட்டு வெளியேறிய அமெரிக்க படைகள்
23 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க படைகள் ஈராக் நாட்டை விட்டு வெளியேறியுள்ளன.
2003-ல் ஈராக் மீது படையெடுப்பு
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமெரிக்கா 2003ம் ஆண்டு படையெடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த படையெடுப்பின் போது அமெரிக்க படைகள் ஈராக்கின் அல் - அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படை தளத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதன் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படைகள் அயின் அல் அசாத் விமானப்படை இயங்கி வந்தன.

ஈராக் அரசின் முடிவு
2023ம் ஆண்டு ஈரான் அரசின் இருநாட்டு உறவு தொடர்பான அழைப்பை தொடர்ந்து அமெரிக்க படைகள் அயின் அல் அசாத் விமானப்படை தளத்தில் இருந்து வெளியேற தொடங்கினர்.
இந்நிலையில், தற்போது அயின் அல் அசாத் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க வீரர்கள் முற்றிலுமாக வெளியேறி விட்டதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்கா உடனான உறவு ராணுவ தலையீடு எதுவும் இல்லாமல் இருநாட்டு ராஜதந்திர பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என்று ஈராக் அரசு அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |