வெனிசுலாவின் கொடூர துணை ராணுவப் படை: குடிமக்களை உடனடியாக வெளியேறச் சொன்ன நாடு
வெனிசுலாவின் கொடூரமான துணை ராணுவப் படை அமெரிக்க குடிமக்களை சல்லடையிட்டுத் தேடி வருவதாக வெளியான தகவல்களை அடுத்து ட்ரம்ப் நிர்வாகம் தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை
தென் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ட்ரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில், colectivos எனப்படும் அரசு ஆதரவு துணை ராணுவப் படை உறுப்பினர்கள் சாலைத் தடைகளை அமைத்து, அமெரிக்க குடிமக்கள் அல்லது டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் என்பதைக் கண்டறியும் பொருட்டு வாகனச் சோதனை உட்பட தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் சாலை வழியாக பயணிக்கும்போது கவனம் தேவை என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெனிசுலாவிலிருந்து சில சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கராகஸ் மீது இரவு நேரத் தாக்குதல் நடத்தி ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்ததன் பின்னர், தென் அமெரிக்க நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அறிவித்ததுடன், எதிர்காலத்தில் வெனிசுலாவுக்குச் செல்ல விரும்புவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்காவே தற்போது வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், வெனிசுலாவின் நிலைமை மிக மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
புனையப்பட்ட கதை
இந்த நிலையில், வெனிசுலா வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இல்லாத ஆபத்து பற்றிய கருத்தை உருவாக்கும் நோக்கில் புனையப்பட்ட கதை இதுவென கூறியுள்ளது.
வெனிசுலாவில் முழுமையான அமைதி, மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுகிறது என்று அமைச்சகம் கூறியுள்ளது, அனைத்து மக்கள் அதிகம் கூடும் மையங்கள், தகவல் தொடர்பு வழிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன.
மேலும் அனைத்து ஆயுதங்களும் பொலிவேரியன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன, இது வெனிசுலா மக்களின் சட்டபூர்வமான ஏகபோகத்திற்கும் அமைதிக்கும் ஒரே உத்தரவாதம் அளிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், துப்பாக்கி ஏந்திய colectivos உறுப்பினர்கள் வெனிசுலாவின் தலைநகரில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித் திரிவதையும், நகரைச் சுற்றி சோதனைச் சாவடிகளை அமைப்பதையும் கராகஸில் உள்ள செய்தியாளர்களும் ஆர்வலர்களும் உறுதி செய்துள்ளனர்.
கராகஸை அதன் மேற்கு எல்லையுடன் இணைக்கும் சாலைகள் டசின் கணக்கான இராணுவ மற்றும் காவல்துறை சோதனைச் சாவடிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |