பேன் கேக் சாப்பிட வற்புறுத்திய மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்
அமெரிக்காவில் பேன் கேக் சாப்பிட சொன்ன மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொன்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேன் கேக் சாப்பிட சொன்ன மனைவி
அமெரிக்காவில் டிசம்பர் 10ம் திகதி 85 வயது கணவர் ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ்(Steven Schwartz), தன்னுடைய 81 வயது மனைவி ஷரோன் ஸ்வார்ட்ஸ்-ஐ(Sharron Schwartz) கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி ஷரோன் தான் செய்த பேன் கேக்கை சாப்பிடுமாறு வற்புறுத்தியதை தொடர்ந்து 85 வயது கணவர் ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ் ஆத்திரத்தில் கிச்சன் கத்தியை எடுத்து குத்தி கொன்றுள்ளார்.
csfotoimages
அத்துடன் தன்னையும் கத்தியால் குத்தி கொண்டு காயப்படுத்திக் கொண்டுள்ளார், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை கேட்டு மகன் வந்து பார்த்த போது, மனைவியை ஆத்திரத்தில் குத்திவிட்டதாக கணவரான ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ் தன்னுடைய மகனிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் கத்தி குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மனைவி ஷரோன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸிடம் வழங்கிய வாக்குமூலம்
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்த பிறகு வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 85 வயது கணவர் ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ், தனக்கு விருப்பம் இல்லாத போதும் தான் செய்த பேன் கேக்கை சாப்பிடுமாறு மனைவி வற்புறுத்தியதால் கோபத்தில் கத்தியால் குத்தி விட்டேன் என பொலிஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமீபத்தில் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு பிறகு, தன்னுடைய அசைவுகள் மற்றும் உணவு முறைகள் மாறிவிட்டதாகவும், ஆனால் என்னுடைய மனைவி எனது உடல் எடையை அதிகரிப்பதற்கான உணவை தொடர்ந்து வழங்க முயற்சி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |